×

புதுவை மார்க்சிஸ்ட் கம்யூ

புதுச்சேரி, பிப். 2: மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக கருத்து பதிவிட்ட புதுவை பிரதேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச குழு டிவிட்டரில் பகிர்ந்துள்ளது. இதன் காரணமாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கத்திடம் கேட்டபோது, `மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி நிறைய பதிவுகள் வெளியிட்டதை அதிகமானோர் பார்த்துள்ளனர். அத்துடன் வேளாண் போராட்டம் தொடர்பாக கருத்துக்களை பதிவிடுகிறோம். மத்திய அரசை விமர்சிப்பதற்காக டிவிட்டர் கணக்கை முடக்குவது தவறானது என்று குறிப்பிட்டு டிவிட்டர் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்ப உள்ளோம். பேச்சுரிமை, கருத்துரிமை அடிப்படையில் நடந்த விஷயங்களையும், மக்கள் பிரச்னைகளையும் டிவிட்டரில் முன்வைத்து வெளியிடுகிறோம். மத்திய அரசு நிர்பந்தத்தால் இக்கணக்கு முடக்கியது தவறு’ என்றார்.

Tags :
× RELATED காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி...