×

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணி

நாகப்பட்டினம், பிப்.4: மகாத்மா காந்தி பெயரிலேயே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மாற்றமின்றி ஒன்றிய அரசு தொடர வேண்டும் என வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். பேரணிக்கு மாவட்ட தலைவர் விவேக் தலைமை வகித்தார். நகர தலைவர் உதயச்சந்திரன் வரவேற்றார்.

மாநில செயலாளர் நவ்ஷாத் முன்னிலை வகித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மாற்ற மின்றி தொடர வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். நாகப்பட்டினம்- நாகூர் சாலையில் உள்ள பால்பண்ணைச்சேரி பஸ் நிறுத்தம் அருகே தொடங்கிய பேரணி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

 

Tags : Congress party ,Union government ,Nagapattinam ,Mahatma Gandhi ,Vivek ,President… ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...