×

பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் கெட்அவுட் தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள் தான் எங்களுக்கு என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் என முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வரின் சமூக வலைதள பதிவில்;
பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி!

நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!

அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.

மொழித் திணிப்பு – பண்பாட்டுத் திணிப்பு – நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் கெட்அவுட் தான். ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் என கூறப்பட்டுள்ளது.

Tags : Pa. ,J. K. Anna ,Tamil Nadu ,K. Stalin ,Chennai ,Memorial Day ,Anna ,
× RELATED சென்னை கொளத்தூரில் இரத்த...