×

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு ரூ.22,795 கோடியில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து; 65,937 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

சென்னை: ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026’ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதில், முதல்வர் முன்னிலையில் தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்காக ரூ.22,795 கோடியில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 65,937 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாடு சுற்றுலாத்துறை, மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா மேம்பாட்டு பகுதிகளில் பெரிய அளவிலான தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையிலும், தமிழ்நாட்டில் முதல்முறையாக செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, பல்வேறு சுற்றுலா நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.

சுற்றுலா வணிகத்தில் அதிகமான தனியார் முதலீடுகளை ஈர்க்கும் இலக்குடன், இந்தியாவின் சிறந்த சுற்றுலா முதலீட்டு தளமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவது, தனியார் முதலீட்டாளர்கள், சுற்றுலா நடத்துபவர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களை ஒரே தளத்தின் கீழ் அரசுடன் ஒன்றிணைப்பது, பார்வையாளர் அனுபவங்களை மேம்படுத்தும் மற்றும் வருவாய் வழிகளை விரிவுபடுத்தும் புதுமையான சுற்றுலா தயாரிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவித்தல் போன்றவை இந்த மாநாட்டின் நோக்கமாகும். தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டில் ரூ.22,794.78 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 65,937 பேருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இவை பாரம்பரிய சுற்றுலா, சாகச சுற்றுலா, எம்ஐசிஇ சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா போன்ற பல்வேறு சுற்றுலா பிரிவுகளில் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்ககம் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, தமிழ்நாடு உலக சுற்றுலா மாநாடு 2026ஐ முன்னிட்டு சுற்றுலா புத்தாக்க ஹேக்கத்தான் என்ற போட்டியை இணைந்து நடத்தியது. இந்த ஹேக்கத்தான், தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் உணவு சார்ந்த சுற்றுலா, வேளாண்மை மற்றும் கிராமிய அனுபவ சுற்றுலா, பாரம்பரிய மற்றும் பண்பாட்டு சுற்றுலா, சூழலியல் மற்றும் சாகச சுற்றுலா, நலவாழ்வு மற்றும் மருத்துவ சுற்றுலா, டிஜிட்டல் சுற்றுலா புத்தாக்கங்கள் ஆகிய 6 துறைகளை மையமாக கொண்டு நடத்தப்பட்டது.

மதிப்பீட்டின் அடிப்படையில், 3 நிறுவனங்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டன. வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கி முதல்வர் வாழ்த்தினார். மயிலாடுதுறை மாவட்டம் – பூம்புகாரில் ரூ.23 கோடியே 60 லட்சம் செலவில் சுற்றுச்சுவர், வாகன நிறுத்துமிடம், சுகாதார வளாகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, நிழற்குடைகள், நுழைவுச் சீட்டு வழங்கும் இடம், சுற்றுலா தகவல் மையம், நடைபாதை, மின் வசதிகள், கலைக்கூடம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள், கடலூர் மாவட்டம் – சிதம்பரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு ரூ.8 கோடியே 65 லட்சம் செலவில் விடுதி வளாகம், நில சீரமைப்பு, பேவர் பிளாக் அமைத்தல், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் மற்றும் காவலர் அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய வங்கியின் புதிய தலைவராக டிரம்ப் தனக்கு நெருக்கமான பொருளாதார நிபுணர் கெவின் வார்ஷின்-ஐ பரிந்துரைத்துள்ளார்.

டிரம்ப் ஆதரவாளரான கெவின் வார்ஷ், டாலர் மதிப்பை உயர்த்த தீவிர நடவடிக்கை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாக தங்கம், வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல், தங்கம், வெள்ளி வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், அதன் மூலமான லாபத்தை உறுதி செய்வதற்காக முதலீட்டாளர்கள் அவற்றை சிறிதளவு விற்க தொடங்கியதும் விலை குறைவுக்கு காரணமாகும்” என்றனர்.

ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தங்க இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு தங்கம் விலை ஏற்றம் குறித்து எந்த கவலையும் கொண்டதாக தெரிவியவில்லை. அதேநேரத்தில் அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கையால் தற்போது தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைத்து இருந்தால் இன்னும் தங்கம் விலை குறைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

* சுற்றுலா வணிகத்தில் அதிகமான தனியார் முதலீடுகளை ஈர்க்கும் இலக்குடன் இந்தியாவின் சிறந்த சுற்றுலா முதலீட்டு தளமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துதல்
* தனியார் முதலீட்டாளர்கள், சுற்றுலா நடத்துபவர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களை ஒரே தளத்தின் கீழ் அரசுடன் ஒன்றிணைத்தல்,
* பார்வையாளர் அனுபவங்களை மேம்படுத்தும் மற்றும் வருவாய் வழிகளை விரிவுபடுத்தும் புதுமையான சுற்றுலா தயாரிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை ஊக்குவித்தல்.

Tags : Tamil Nadu Global Tourism Summit ,MoUs ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu Global Tourism Summit-2026 ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED பெண்ணையாறு நதி நீர் பிரச்சனையை...