×

3 நாட்கள் சரிவுக்கு பிறகு ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 29ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் 11 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.28,160 வரை அதிகரித்தது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சில் உறைய வைத்தது.

இந்நிலையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 30ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. 30ம் தேதி அன்று தங்கம் விலை ஒரே நாளில் காலை, மாலை என பவுனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 26,800க்கு விற்பனையானது. 31ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் 1 லட்சத்து 19,200க்கு விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடக்க நாளில் தங்கத்தில் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,600க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் கடந்த 30ம் தேதி, 31ம் தேதி, 1ம் தேதி (தங்கம் மார்க்கெட் விடுமுறை), தொடர்ந்து நேற்று என 3 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.22,800 குறைந்துள்ளது. இந்த நிலையில் 3 நாள் சரிவுக்கு பிறகு, தங்கம் விலை ஒரே நாளில் இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 3 லட்சத்திற்கும் விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி, சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED 3 நாட்கள் சரிவுக்கு பிறகு ஆபரணத்...