×

முதல்முறையாக ஆஸி. ஓபனை வென்றார் அல்காரஸ்: ஜோகோவிச் போராடி தோல்வி

 

கான்பரா: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் 22 வயதே ஆன இளம் வீரர் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வீழ்த்தினார். ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்காரஸ் முதல்முறையாக ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அல்காரஸ் முதல்முறையாக ஆஸி. பட்டத்தை வென்றார்.

பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் தலா 2 கிராண்ட்ஸ்லாம் வென்ற அல்காரஸ் 7வது கிராண்ட்ஸ்லாம் வென்றார். முதல் செட்டை வென்றபோதும் 1-3 என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜோகோவிச் போராடி தோல்வி அடைந்தார். 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல ஜோகோவிச் போராடிய நிலையில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற பிறகு இதுவரை எந்த பட்டத்தையும் ஜோகோவிச் வெல்லவில்லை

Tags : Aussie ,Open ,Alcarus ,Djokovic ,Canberra ,Carlos Alcarus ,Australian Open ,Spain ,
× RELATED தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து...