- விஜய்
- குஷ்பு
- ஆரணி
- பாஜக
- துணை ஜனாதிபதி
- குஷ்பு
- திருவண்ணாமலை மாவட்டம்
- விஜயல்
- என்டிஏ கூட்டணி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பாஜக மாநில துணை தலைவரும், நடிகையுமான குஷ்பு அளித்த பேட்டி: நடிகர் விஜய்யால் தமிழகத்தில் என்டிஏ கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இனி அவர் நடிக்க மாட்டார் என கூறியதுதான் எனக்கு பாதிப்பு. நான் விஜயை அரசியல்வாதியாக பார்க்கவில்லை.
எனது தம்பியாகத்தான் பார்க்கிறேன். விஜய்க்கு பாஜக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால், அவர் கூட்டத்தில் பேசியதை நானும் கேட்டேன். அது என்ன அழுத்தம் என்பது புரியவில்லை. தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
