மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதேஅளவில் நீடித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 62 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 50 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு, மின் நிலையங்கள் வழியாக 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 92.77 அடியில் இருந்து, 92.70 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 55.79 டிஎம்சியாக உள்ளது.
