×

இந்தமுறை ராகுல் பிரதமராவது உறுதி: எம்பி சசிகாந்த் செந்தில் பேட்டி

ஆவடி: இந்தமுறை ராகுல் பிரதமராவது உறுதி என ஆவடி மாநகர தலைவர் அறிமுக கூட்டத்தில், எம்பி சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையால் தேர்தல் நடத்தப்பட்டு, பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அமீத்பாபு, ஆவடி மாநகர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய மாநகர தலைவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, ஆவடி பட்டாபிராமில் உள்ள காமராஜர், அம்பேத்கர் மற்றும் ராஜிவ் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதையடுத்து நிருபர்களிடம் எம்பி சசிகாந்த் செந்தில் கூறுகையில், ஆவடி பகுதிக்கு வரலாறு உள்ளது. காங்கிரசுக்கும் வரலாறும் உள்ளது. காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் பணியால் இன்றும் தமிழகத்தில் காங்கிரஸ் உயிர்ப்புடன் உள்ளது. 2024ல் ராகுல் பிரதமராவது தவறிவிட்டது. ஆனால் 2029ல் மிஸ் ஆகாது. அதற்காக நாம் உழைக்கவேண்டும். ஆவடி தொகுதி குறித்து நிர்வாகிகள் தங்கள் விருப்பதை தெரிவித்துள்ளனர். நிச்சயம் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து ஆவடி தொகுதியை வெற்றிபெற முயற்சிப்பேன். பாசிடிவான செய்திகள் விரைவில் வரும். கூடுதல் இடங்கள் குறித்து இரு கட்சி தலைவர்களும் முடிவெடுப்பார்கள்.

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி என்ற கேள்விக்கு, தற்போது நடைபெற உள்ளது சாதாரண தேர்தல் மட்டுமல்ல கொள்கை சார்ந்த போர், இப்படிப்பட்ட நேரத்தில் தெளிவாக தலைவர்கள் முடிவெடுப்பார்கள். விஜய்க்கு நெருக்கடி என்பது பாஜகவின் முறை. காங்கிரசுக்கு அனைத்து கிராமங்களிலும் கிளை உள்ளது. ஆவடி தொகுதி குறித்து எல் லோருடைய எண்ணத்தையும் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்” என கூறியுள்ளார். நிகழ்வில், முன்னாள் மாவட்ட தலைவர் யுவராஜ், விவசாய பிரிவு தலைவர் பவுன் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Rahul ,Sasikanth ,Sendil ,AVADI ,SASIKANTH SENDIL ,INAUGURAL ,Congress party ,Amitpabu ,Batapram ,mayor ,
× RELATED தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்...