×

காந்தியடிகளின் கனவுகளை மீட்டெடுப்போம்: வீரபாண்டியன் உறுதி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: காந்தியடிகள் நாட்டின் விடுதலைக்காக மட்டும் அல்லாமல், விடுதலை பெறுகிற இந்தியா அதிகாரங்களை பகிர்ந்து கொள்கிற இந்தியாவாக இருக்க வேண்டும். அதிகாரம் ஒரே இடத்தில் குவிவது ஆபத்து என்றார்; அதற்காக ேபாராடினார். அதிகாரம் ஒரே இடத்தில் குவிவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை ஒன்றிய அரசு இன்று நிரூபித்துக் கொண்டு உள்ளது. நாட்டின் பிரதமர் நிரூபித்துக் கொண்டு உள்ளார். அதிகாரங்களை ஒன்றிய அரசு குவித்துக்கொண்டு மாநிலங்களுக்கு சொட்டு நீர் போல் சொட்டு சொட்டாக அதிகாரங்களை தருகிறது.

ஒரே இடத்தில் அதிகார பரவல் அச்சமடைய செய்யும். ஒன்றிய அரசு காந்தியடிகளை மறைக்கப் பார்க்கிறது. அவரது கொள்கைகளை சிதைக்கிறது. எனவே, காந்தியின் கொள்கைகளை மீட்டு எடுக்க வேண்டிய காலச்சூழல் இன்று நமக்கு ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடும், தமிழக முதல்வரும் அறிவார்ந்து நடத்தும் போர் என்பதே காந்தியின் நினைவுகளை மீட்டெடுக்கத்தான். காந்தியடிகள் பெயரில் கொண்டு வரப்பட்ட நூறுநாள் வேலை திட்டத்தில் தாக்குதல் தொடுத்துள்ளது ஒன்றிய அரசு. நூறுநாள் வேலை என்பது விவசாயிகளை பாதுகாப்பது மட்டும் அல்ல. விவசாயத்தை பாதுகாப்பது. காந்தியின் கனவுகளை ஒன்றிய அரசு சிதைத்துள்ளது. ஆனால் இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் காந்தியின் கனவுகளை மீட்டெடுத்து வாகை சூடுவோம். இவ்வாறு கூறினார்.

Tags : Gandhiji ,Veerapandian ,Karaikudi ,State Secretary of ,Communist Party of India ,Karaikudi, Sivaganga district ,India ,
× RELATED சொல்லிட்டாங்க…