×

பெரம்பலூரில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் ஏற்றனர்

பெரம்பலூர்,ஜன.30: பெரம்பலூரில் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியினை அனைத்துத் துறை அரசு அலுவலர்களு ம் ஏற்றனர். ஜனவரி 30ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, ஒவ்வொரு வருடமும் அரசு அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக சுதந்திர போராட்டத் தியாகிகளை கவுரவிக்கும் விதமாக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந் திரன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) சுப்பையா, இணை இயக்குநர் (வேளாண்மை) கருணாநிதி, மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரமணகோபால் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur ,Collector ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...