டெல்லி: வாழ்வுரிமை என்பது மாதவிடாய் காலத்தில் உடலை சுகாதாரமாக பராமரிப்பதையும் உள்ளடக்கியது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மட்கும் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம். மாணவிகளுக்கென தண்ணீர் வசதியுடன் கூடிய தனிக் கழிப்பறையை உறுதி செய்ய வேண்டும்.
