போகோடா: வடகிழக்கு கொலம்பியாவின் நோர்டே டி சாண்டாண்டர் மாகாணத்தின் தலைநகரான குகுட்டாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து அரசுக்கு சொந்தமான சடேனா நிறுவனம் இயக்கும் சிறிய ரக விமானம் மலைகளால் சூழப்பட்ட நகராட்சியான ஒகானாவிற்கு புறப்பட்டுச்சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் இந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். விமானத்தில் 2 விமான ஊழியர்கள் மற்றும் 13 பயணிகள் இருந்ததாக தெரிகின்றது. இவர்கள் அனைவரும் விமான விபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் அந்த நாட்டு எம்பி டியோஜெனெஸ் குயின்டெரோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
