×

அமெரிக்க கிரிக்கெட் வீரருக்கு தடை: ஐசிசி அதிரடி

நியூயார்க்: அமெரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஆரோன் ஜோன்ஸை இடைக்காலத் தடை செய்து ஐசிசிஅதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. நியூயார்க்கில் பிறந்த 31 வயதான ஆரோன் ஜோன்ஸ், அமெரிக்க கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர். இதுவரை 52 ஒருநாள் போட்டிகள் மற்றும் 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோன்ஸ், கடந்த 2024 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்கா ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறியதில் முக்கிய பங்காற்றினார்.

இந்தநிலையில்2023-24 சீசனில் பார்படாஸில் நடைபெற்ற ‘பிம்10’ லீக் தொடரில் ஆரோன் ஜோன்ஸ் பங்கேற்றார். இந்தத் தொடரின் போது அவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும், ஐசிசி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சூதாட்டத் தரகர்கள் தன்னை அணுகியது குறித்த தகவல்களைத் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்தது, ஊழல் தடுப்பு அதிகாரிகளின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க மறுத்தது, உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க அவருக்கு ஜனவரி 28(நேற்று) முதல் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Tags : ICC ,New York ,Aaron Jones ,
× RELATED மரியாதை, ஆதரவில்லாததால் கிரிக்கெட்டை விட்டு விலகினேன்: யுவராஜ்சிங் வேதனை