- முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா
- வேதாரண்யம்
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- மாவட்ட விளையாட்டு அதிகாரி
- ஆனந்தன்
வேதாரண்யம், ஜன. 29: வேதாரண்யத்தில்தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் சார்பில்முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாநடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்தன் தலைமையேற்று விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தார். இரண்டு நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட், வாலிபால்,கேரம், கயிறு இழுத்தல், கபாடி, குண்டறிதல், தடகளபோட்டிகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குவேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, ஆத்மா குழுதலைவர்கள் உதயம்முருகையன், சதாசிவம், புகழேந்திபுனித அந்தோனியார் பள்ளி. தாளாளர் சகாயராஜ்,விளையாட்டு ஆணையத்தின் ஒன்றிய தலைவர் சிம்பு உள்ளிட்டவர்கள் பரிசுகளை வழங்கினர்.
