×

1ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்

தர்மபுரி, ஜன.29: வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் வரும் 1ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 1ம் தேதி வடலூர் ராமலிங்கம் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படை வீரர் மது விற்பனைக்கூடம் அனைத்தும் வரும் 31ம் தேதி இரவு 10 மணி முதல், வரும் 2ம் தேதி காலை 12 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tasmac ,Dharmapuri ,Vadalur Ramalingam Memorial Day ,Tasmak ,Dharmapuri district ,Collector ,Sathis ,Vadalur Ramalingam ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்