×

நாய்கள் விரட்டியதால் விபரீதம் கிணற்றில் விழுந்து மான் பலி

பாடாலூர், ஜன. 28: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மருதடி மலைப்பகுதியில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இந்த மலைப்பகுதியில் அருகே குடியிருப்புகளும் உள்ளன. இதனால் அடிக்கடி மான்கள், இரையும் தண்ணீரும் தேடி கிராமத்துக்குள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் மான்களை தெரு நாய்கள் கடிக்கும் சமப்வம் அடிக்கடி நடப்பதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று மாலை மலைப்பகுதியில் இருந்து ஒரு மான் தண்ணீர் தேடி மருதடி வயல் பகுதிக்கு வந்தது.

அப்போது மருதடி வயல் பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் மானை விரட்டிசென்றன. இதனால் மிரண்டு போன மான், நாய்களுக்கு பயந்து உயிரக் காப்பாற்றிக்கொள்ள வேக வேகமாக ஓடியது. அப்போது அதே பகுதி கோழிப்பண்ணை அருகே இருந்த விவசாய கிணற்றில் மான், எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதில் தண்ணீரில் தந்தளித்த மான் வெளியே வர முடியாமல் பரிதாபமாக இறந்தது.வனத்துறை அதிகாரிகள் மானை மீட்டு விசாரிக்கின்றனர்.

 

Tags : Patalur ,Marudhadi ,Alathur taluka ,Perambalur district ,
× RELATED வரும் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்