×

பாடாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

பாடாலூர், ஜன.26: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர்கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

 

Tags : Patalur ,Siruvachur ,Assistant Executive Engineer ,Ravikumar ,Tamil Nadu Electricity Board ,Pudukkurichi Substation ,Alathur taluka ,Perambalur district ,
× RELATED தீயணைப்பு வீரர்கள் உதவியுடன்...