- Melakottaiyur
- வண்டலூர்
- சென்னை
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- நிலை
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு
- தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கம்
சென்னை: வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் நடைபெற உள்ள 3 நாட்கள் ஆசிய அளவிலான சைக்கிள் போட்டிகளை நாளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய சைக்கிள் சம்மேளனம், தமிழ்நாடு சைக்கிள் சங்கம் ஆகியவை இணைந்து ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள மேலக்கோட்டையூரில் வரும், நாளை தொடங்கி இம்மாதம் 31 தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
இந்தப் போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடங்கி வைக்கிறார். இந்த ஆசிய சைக்கிள் போட்டிகளில் கலந்து கொள்ள மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பிலிப்பைன்ஸ், மியான்மர், லிதுவேனியா, நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட 11 வெளிநாடுகளில் இருந்து, 120க்கும் அதிகமான வெளிநாட்டு சைக்கிள் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
அவர்கள் விமானங்கள் மூலம், செவ்வாய் கிழமை மாலையில் இருந்து, புதன்கிழமை காலை வரை தனித்தனி, பயணிகள் விமானங்களில், சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். இவர்களோடு 15 தமிழ்நாட்டு வீரர்கள் உட்பட, 30 இந்திய வீரர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இந்த சைக்கிள் போட்டிகளில் கலந்து கொள்பவர்களில் பெண் வீராங்கனைகளும் உள்ளனர்.
