- ஐ.நா.
- ஐஜி
- ATGP
- ஜெயராம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சத்யபிரியா
- சூடான்
- ஐ.நா. அமைதி காக்கும் பணி
- காவலர் நலன்
- டிஜிபி
- திருச்சி
சென்னை: தமிழக பெண் போலீஸ் அதிகாரி சத்தியப்பிரியா, ஐநா சபை அமைதிக்குழு பணிக்காக சூடான் செல்வது உறுதியாகியுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவலர் நலன் பிரிவு ஐஜியாக இருப்பவர் சத்தியப்பிரியா. இவர், திருச்சியில் போலீஸ் கமிஷனர் மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக பணியாற்றினார்.
இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சூடான் நாட்டுக்கு அமைதிக் குழுவுக்கு ஐஜி ரேங்கில் உள்ள பதவி காலியாக இருப்பது தெரியவந்ததால், அந்தப் பணிக்கு சத்தியப்பிரியா விண்ணப்பித்திருந்தார். அதை பரிசீலித்த ஐநா சபை, அவருக்கு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து விரைவில் அவர் சூடான் நாட்டுக்கு ஐநா அமைதிக்குழுவில் இணைந்து பணியில் ஈடுபடுகிறார்.
அதேபோல, ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த ஜெயராம், ஆள் கடத்தல் வழக்கில், கடத்தலுக்கு போலீஸ் வாகனம் கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது அவரது சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓரிரு நாளில் அவர் புதிய பணியிடத்தில் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மே மாதம் அவர் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
