×

அரசலூர் ஏரி உடைப்பு சீரமைக்கும் பணி: விடிய, விடிய தீவிரம் 10 ஆயிரம் மணல் மூட்டைகளால் அடைக்கப்படுகிறது

பெரம்பலூர்,ஜன.29: அரசலூர் ஏரி உடைப்பு சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வெள்ள பாதிப்புகளை வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூர் பெரிய ஏரி, கரை பழுதாகி தண்ணீர் கசிந்து கசிந்து வந்த நிலையில் அதனை பொதுப்பணித்துறை சரி செய்யாததால், கடந்த 27ம் தேதி திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களை மூழ்கியது. வெள்ளநீர், வேத நதியில் கரைபுரண்டு ஓடியதால், பாலையூர் - தொண்டப்பாடி கிராமங்களுக்கு இடையே வி.களத்தூர் சாலையிலு ள்ள தற்காலிக தரைப்பால த்தையும் அறுத்து,கரைத்து காணாமல் போகசெய்தது.

ஏரி உடைப்பை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பெரம்பலூர் கலெக்டர்  வெங்கடபிரியா உத்தரவிட்டதை தொடர்ந்து, பொதுப்பணித்துறையின் (அரியலூர்) செயற்பொறியாளர் ஆசைத்தம்பி தலைமையில், (பெரம்பலூர்) உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சித்தார்த்தன் உள்ளிட்டோர் இரவு பகலாக 10 ஆயிரம் மணல் மூட்டைகள், 500 சவுக்குக் கழிகள், கருங்கற்களை கரைகளில் அடுக்கி, ஏரியை பலப்படுத்தி, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மதியம் பொதுப்பணித் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பு பொறியாளர் திருவேட் டை செல்லம் நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். சீரமைப்பு பணிகள் இன்று (29ம்தேதி) நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிப்புகள் கணக்கெடுப்புப் பணி:
இந்நிலையில் ஏரி உடைப்பால் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் சேத விபரங்களை கணக்கெடுக்க, பெரம்பலூ ர் மாவட்டக் கலெக்டர்  வெங்கடபிரியா உத்தரவிட் டார். அதன்படி வேப்பந்தட்டை தாசில்தார் கிருஷ்ணராஜ் தலைமையில், மண்டல துணை தாசில்தார் கருணாகரன், வருவாய் ஆ ய்வாளர்கள் (வெங்கலம்) கவுரி, (வாலிகண்டபுரம்) தங்கமணி மற்றும் சம்மந் தப்பட்ட அரசலூர் விஏஓ சதீஷ்குமார் உள்ளிட்ட 20 விஏஓக்கள், 20 கிராம உத வியாளர்கள் ஆகியோருட ன், வேளாண்அலுவலர்கள் ரமேஷ், உதவி வேளாண் அலுவலர்கள் பாண்டியன், துரைமுருகன்,சவுந்தர்ராஜ், கிஷோர்குமார் உள்ளிட் டோர் களஆய்வு மேற்கொண்டு சேத விபரங்களை கணக்கெடுத்துள்ளனர்.

Tags : Vidya ,
× RELATED வள்ளியூர் வித்யா மந்திர் பெண்கள் பள்ளி 100% தேர்ச்சி