×

40 பேர் கைது தைப்பூச விழாவையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாகை, ஜன. 29: தைப்பூச விழாவையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். தைப்பூச திருநாளில் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். இதன்படி நாகை அருகே சிக்கல் சிங்காரவேலர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் திருக்குவளை அருகே எட்டுக்குடி முருகன் கோயில், பெரவச்சேரி சண்முகநாதர் கோயில், நாகை மெய்கண்டநாதசுவாமி கோயில், நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோயிலில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : temples ,festival ,Murugan ,occasion ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா