×

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 28ம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதால், மாவட்டம் முழுவதும் புதன்கிழமை உள்ளூர் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்;

“திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம் மற்றும் நகர பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் குடமுழுக்கானது 28.01.2026 அன்று நடைபெற உள்ளது. எனவே, இந்நிகழ்வின் போது பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக உள்ளூர் விடுமுறை அளித்திட கோரி கடிதம் வரப்பெற்றுள்ளது.

செயல் அலுவலர் கோரிக்கையை ஏற்று திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) 28.012026 புதன் கிழமை அன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்தும், மேற்படி விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 07.02.2026 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்தும் இதன் மூலம் ஆணையிடப்படுகிறது” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags : Thiruvarur district ,Thiruvarur ,Rajagopalaswamy Temple ,Arulmigu ,Thiruvaroor district ,Mannarkudi circle ,
× RELATED டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய...