×

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,MSCC ,Chennai ,Chengalpattu ,Himalayan regions ,northern Kerala ,Inner Tamil Nadu ,
× RELATED ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு...