×

பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் மசோதா: ஜனாதிபதி ஒப்புதல்

டெல்லி: மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

அந்த மசோதாவில், பத்திரப்பதிவு செய்யப்படும் சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சொத்து அடமானத்தில் இருந்தால் அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து ‘கண்டறியமுடியவில்லை’ என்ற சான்றிதழ் பெற வேண்டும் என்றும், உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து அதனையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Delhi ,Revenue Department ,Tamil Nadu government ,
× RELATED மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின்...