×

சாய, சலவை பட்டறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்

ஓமலூர், ஜன.26: சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள அரசு நிலத்தில், ஜவுளி பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தியது. இதை தொடர்ந்து அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியில் அந்தத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது. இதில், நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடும் சாயப்பட்டறைகள் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் அமைக்கக் கூடாது எனவும், தொடர்ந்து ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் அமைப்பதை நிறுத்த கோரி, ஒரு லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்று மத்திய அரசுக்கு தெரிவிப்பது.

சேலம் மாநகரம் வழியாக செல்லும் திருமணிமுத்தாறு நீரை சுத்திகரித்து, ஆற்றில் சுத்தமாக நீர் கலப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், சேலம் நீர் ஆதார பாதுகாப்பு இயக்க தலைவர் ராஜேந்திரன், ஓமலூர், வெள்ளாளப்பட்டி மற்றும் தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Omalur ,Salem Jaghir Ammapalaya ,White Belt ,
× RELATED பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்