×

‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் தொடக்கம்

சேலம், ஜன.26: சேலத்தில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா ‘இது நம்ம ஆட்டம் 2026’ விளையாட்டு போட்டிகளை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் வட்டார அளவிலான முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. ேசலம் கோட்டை சிஎஸ்ஐ பள்ளியில் நடந்த தொடக்க விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு விழா “இது நம்ம ஆட்டம் 2026” மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் வட்டார அளவிலான போட்டிகள் இன்று தொடங்கியது. 100 மீட்டர் ஓட்டம், குண்டெறிதல், கேரம் (இரட்டையர்), இருபாலருக்கும் கைப்பந்து, தெரு கிரிக்கெட் (ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

போட்டிகளில் முதலிடம் பெறுவோர் மற்றும் அணிகள், மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். மாவட்ட அளவிலான போட்டிகள் ஜன.31, பிப்.1 ஆகிய 2 நாட்கள் நடத்தப்பட உள்ளது. அத்துடன் கோலம், ஓவியபோட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டர், குண்டெறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.6,000, ரூ.4,000, ரூ.2,000 பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.மாவட்ட அளவிலான கபடி மற்றும் தெரு கிரிக்கெட் போட்டிகளில் முதலிடம் பெறும் அணியினர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வர். இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.75000, ரூ.50000, ரூ.25000 பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது. மேலும் வரும் 27ம் தேதி கபடி, கயிறு இழுத்தல், எறிபந்து ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.3000, ரூ.2000, ரூ.1000 பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ ரவிக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : game 2026 ,Salem ,Minister ,Rajendran ,Chief Minister's Youth Sports Festival ,Chief Minister's ,Youth Sports Festival ,
× RELATED சாய, சலவை பட்டறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்