×

முசிறி அருகே ரேஷன் குறைதீர் கூட்டம்

முசிறி, ஜன. 26: முசிறி அருகே ரேஷன் குறைதீர் கூட்டம் நடந்தது. முசிறி அருகே தாதம்பட்டி கிராமத்தில் நியாய விலை கடையில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். தனி வருவாய் ஆய்வாளர் ஜீவா வரவேற்றார்.

பொதுமக்களிடமிருந்து பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம், கடை மாற்றம், குறித்து பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் சுமார் 25 மனுக்கள் பெறப்பட்டு அனைத்தும் தீர்வு காணப்பட்டது. முன்னதாக விற்பனையாளர் சந்திரபோஸ் அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்.

 

Tags : Musiri ,Dadhampatti ,District Distribution Officer ,Anandakumar.… ,
× RELATED திருச்சியில் கஞ்சா விற்றவர் கைது