- உளுந்தூர்பேட்டை
- பன்னீர்செல்வம்
- சுந்தர்
- பொட்டுப்பட்டி
- கல்லாக்கிரிச்சி மாவட்டம்
- எலவனாசூர்கோட்டை மின்சார வாரியம்
- கோட்டையூர்
உளுந்தூர்பேட்டை, ஜன. 26: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சுந்தர்(24). இவர் எலவனாசூர்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று கொட்டையூர் கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் மின்சாரம் தாக்கியதில் மின் கம்பியில் ெதாங்கியபடி இருந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஒரு கை முற்றிலும் தீக்காயத்தால் செயல் இழந்ததால் அங்கிருந்து கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் உடனடியாக ஒரு கையை அகற்ற வேண்டும் என கூறியதால் ஒரு கை அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுந்தரின் தங்கை சுவாதி(21) எவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது அண்ணன் சுந்தரை சம்பவத்தன்று கொட்டையூரில் ஏற்பட்ட பழுதினை சரி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும், மின்கம்பம் ஏற தெரியாது என கூறிய பின்னரும் மின்பாதை ஆய்வாளர் பழனிசாமி, ஒயர்மேன் சிங்காரவேல் ஆகியோர் அழைத்து சென்று மின்கம்பம் ஏறுமாறு கூறியுள்ளனர். அப்போது இருவரும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. கம்பத்தில் ஏறுமாறு கூறியுள்ளனர். பின்னர் கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு தற்போது கை அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பணி நேரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
