×

கஞ்சாவிற்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை செங்கம் பகுதியில்

செங்கம், ஜன.29: செங்கம் பகுதிகளில் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கம் தாலுகாவில் நகர் புறம் மற்றும் கிராம புறங்களில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு இளம் வயதினர் அடிமையாகி வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள், இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பாக்கெட் சாராயம், கள்ள மதுபானம் என பல்வேறு வகையில் போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வெளி ஊர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வரவழைத்து மாணவர்களை குறிவைத்து அவர்களின் மூலம் கஞ்சா விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கஞ்சா, மதுபானங்கள் போன்ற போதை வஸ்த்துக்களுக்கு அடிமையாக்க சமூக விரோத கும்பல் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டு, செங்கம் பகுதிகளில் மாணவர்களை கண்காணித்து சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Youths ,area ,Sengum ,
× RELATED பள்ளிப்பட்டு அருகே காட்டுப்...