×

தமிழுணர்வும் சாகாது இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடபாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு : மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது.

திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது. நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Tags : Tamil Nagar ,Sakathu ,Mu K. Stalin ,Chennai ,Day of Veeravanaka ,Martyrs ,First Minister ,K. Stalin ,Martyrs Veeravanaka ,
× RELATED ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடரை...