×

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சென்ட்ரல், காமராஜர் சாலை, மெரினா உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,southern Indian ,Puduwa ,Karaikal ,Inner Tamil Nadu ,
× RELATED பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்...