- சபாநாயகர்
- பதவு
- சென்னை
- தமிழ்நாடு சட்டமன்றம்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- கவர்னர்
- ஆர்.என்.ரவி
- சட்டமன்ற உறுப்பினர்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். தமிழக சட்டசபை கடந்த 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால் தனது உரையை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதன்பிறகு, கவர்னரின் தமிழாக்க உரையை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். இது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 22-ந்தேதி முதல், ஆளுரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.
இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து, இன்று சட்டசபையில் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். 5 நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. ஆளுநர் உரையோடு தொடங்கிய கூட்டம், உரைக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வரின் பதிலுரையோடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
