×

சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய குறிப்புகள் பின்வருமாறு..

“அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியால் மாநிலம் சந்தித்த பின்னடைவு, ஓரவஞ்சனையுடன் செயல்படும் ஒன்றிய அரசு என்ற இடியாப்ப சிக்கல் போன்ற சூழலில்தான் 6வது முறையாக ஆட்சிக்கு வந்தோம்.

* தற்போது 5 ஆண்டு கால ஆட்சியில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

* என்னுடைய இலக்குகளை நான் வென்றுவிட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனையால் தமிழ்நாடு தலைநிமிர்ந்துவிட்டது.

“பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எதிர்கொள்ளாத நெருக்கடிகளை தற்போது எதிர்கொள்கிறோம். அவர்கள் காலத்தில் இருந்த ஆளுநர்கள் இப்படி இல்லை. முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும் அதை ரணமாக்கும் வகையில் செயல்பட்டதில்லை.

* தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிற மாநிலங்கள் தலை உயர்த்தி பார்க்கின்றன. என்னுடைய முதல் கையெழுத்தே மகளிர் விடியல் பயண திட்டம்தான். விடியல் பயணம் மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ.60,000 வரை சேமித்துள்ளனர்.

* காலை உணவு திட்டம் மூலம் பள்ளி குழந்தைகள் சத்தான உணவை உண்டு வருகின்றனர். அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளோம்.

* மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதை எங்கள் அண்ணன் சீர் வழங்குகிறார் என்று கூறுகிறார்கள்.மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.29,000 வழங்கி உள்ளோம்.கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

* திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும். சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு.

* முதலமைச்சராக பொறுப்பேற்று 1,724 நாட்களில் 8,655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். மக்களுக்காக வாழ்ந்தேன், தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தேன் என்பது புகழ்ச்சி அல்ல, உண்மை.

* தமிழ்நாட்டு நலனுக்காக செயல்பட வேண்டிய ஆளுநர், மக்களுக்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் வகிக்கும் பதவியை அவரே அவமானப்படுத்துகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநர் ஒரே காரணத்தை சொல்லி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறி உள்ளார்.

* அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால். சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடியும்போது நாட்டுப்பண் பாடுவதுதான் வழக்கம். சட்டப்பேரவையில் முதலில் நாட்டுப்பண் பாடவில்லை என்பதையே குற்றச்சாட்டாக கூறி வருகிறார் ஆளுநர்.

* தேச பக்தி குறித்து பாடம் எடுக்கும் நிலையில் நாங்களும் இல்லை; தேச விரோதிகள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். தேச பக்தி பாடம் எடுக்கும் அளவுக்கு அவர்கள் இந்த தேசத்துக்காக போராடவில்லை.

* 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு பொருளாதாரத்தில் இரட்டை வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்நாடு இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்தில் உள்ளது.

* வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் தொகை 1.4%தான், இதையும் நீக்க தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு 65க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது.

* தமிழ்நாட்டில் மதச்சண்டை, சாதிச் சண்டை, கும்பல் வன்முறை இல்லை. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். ரூ.1,088 கோடியில் 2,200 கி.மீ. ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்.

* சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்ந்துள்ளது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2,000லிருந்து ரூ.3,400ஆக உயர்ந்துள்ளது. சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் ஊழியர்கள் உயிரிழந்தால் இறுதிச்சடங்குக்கு ரூ.20,000 வழங்கப்படும்.

* அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.

* உங்களால் நிறைவேற்ற முடியாது என சவால் விடப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதருக்கும் எல்லா திட்டங்களும் சென்றடைவதை உறுதி செய்கிறோம். எனக்கு மனவலிமை கொடுப்பதும், தோள் கொடுப்பதும் எங்களின் தோழமை கட்சிகள்தான்.

* என்னை இயக்கிக் கொண்டிருப்பது திமுக தொண்டர்கள்தான். எனக்கும் எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

* 5 ஆண்டு கால உழைப்பு, வளர்ச்சியை பார்த்து அடுத்த 5 ஆண்டுக்கு திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். எனக்கு என்னைவிட தமிழ்நாட்டு மக்கள் மீது கூடுதலாக நம்பிக்கை உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முதலமைச்சர் உரையில் முக்கிய அம்சங்கள்

* விடியல் பயணம் மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ.60,000 வரை சேமித்துள்ளனர்.
*மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதை எங்கள் அண்ணன் சீர் வழங்குகிறார் என்று கூறுகிறார்கள்.
*அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2,000லிருந்து ரூ.3,400ஆக உயர்ந்துள்ளது.
*வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் தொகை 1.4%தான், இதையும் நீக்க தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
*திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு 65க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது.
*சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும்.

Tags : Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,Governor ,Supreme Court ,Union Government ,
× RELATED சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி...