மணப்பாறை, ஜன.24: மணப்பாறை காவல் சரகத்தில் அரசு மதுபாட்டில்கள் அனுமதியின்றி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜாசேர்வை தலைமையிலான போலீஸார் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செவலூர் பிரிவு மற்றும் தினசரி காய்கறி சந்தை பகுதிகளில் அரசு மதுபாட்டில்களை அனுமதியின்றி கள்ள சந்தையில் விற்பனை செய்துக் கொண்டிருந்த மருங்காபுரி வட்டம் ஆண்டியப்பட்டியை சேர்ந்த பொன்னையா மகன் ராஜேந்திரன்(35), பொய்கைப்பட்டி பெரியசாமி மகன் சின்னதுரை(41) ஆகியோரை கைது செய்த மணப்பாறை போலீசார் அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
