- ஐக்கிய மாநிலங்கள்
- உலக சுகாதார நிறுவனம்
- நியூயார்க்
- ஜனாதிபதி
- டொனால்டு டிரம்ப்
- எங்களுக்கு
- வேந்தர்
- கொரோனா தொற்று
நியூயார்க்: அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அதிபரான முதல் நாளில் தனது நிர்வாக உத்தரவின் மூலமாக உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று அறிவித்து இருந்தார். கொரோனா தொற்றுநோய் மற்றும் பிற உலகளாவிய சுகாதார நெருக்கடிகளை உலக சுகாதார அமைப்பு தவறாக கையாண்டதாகவும் இதன் காரணமாக அமெரிக்கா விலகுவதாகவும் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து ஒரு ஆண்டுகள் ஆகும் நிலையில் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதை அமெரிக்கா இறுதி செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பின்படி அமெரிக்கா அமைப்பிற்கு 130மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளது.
மேலும் ஒரு புதிய தொற்றுநோய் குறித்து அமெரிக்காவிற்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கக்கூடிய பிற நாடுகளின் தரவுகளுக்கான அணுகல் தடுக்கப்படும். புதிய நோய் தொற்றுக்களுக்கு எதிராக தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உருவாக்குவதற்கு அமெரிக்க விஞ்ஞானிகளின் திறனை முடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
