×

போராட்ட பலி 5 ஆயிரமாக உயர்வு ஈரானை நெருங்கும் அமெரிக்க போர் கப்பல்கள்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

துபாய்: ஈரானில் போராட்டக்காரர்களை அரசு ஒடுக்கும் நடவடிக்கையில் 5002 பேர் பலியாகி உள்ளனர் என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையே, அமெரிக்க போர் கப்பல்கள் மத்திய கிழக்கை நோக்கி செல்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

போராட்டக்காரர்களைக் கலைக்கப் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போராட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை 5002 ஆக அதிகரித்துள்ளது என அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில்,4719 பேர் போராட்டக்காரர்கள்,203 பேர் அரசு துறைகளை சார்ந்தவர்கள். 43 பேர் சிறுவர்கள்.40 பேர் பொதுமக்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, டாவோஸ் உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின் அதிபர் டிரம்ப் டிரம்ப் அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.

போர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்த டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,ஈரானை நோக்கி அமெரிக்க போர் கப்பல்கள் சென்று கொண்டிருக்கிறது. அவர்களை தாக்குவதில் விருப்பமில்லை. ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார். அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில்,தெற்கு சீன கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர் கப்பல் ஆபிரகாம் லிங்கன் மற்றும் அதன் தொடர்புடைய இதர கப்பல்கள் ஈரானை நோக்கி செல்கின்றன என்று தெரிவித்தனர்.

 

Tags : US ,Iran ,President Trump ,Dubai ,Middle East ,
× RELATED டிரம்ப் தலையீட்டால் 800 மரண தண்டனை...