×

நாகராஜா கோயில் தைதிருவிழா தேரோட்டம் சுரேஷ்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்

நாகர்கோவில், ஜன.29: நாகர்கோவில் நாகராஜா கோயில் தை திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. நாகர்கோவில் நாகராஜா கோயில் தை திருவிழா  கடந்த 20ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல்நாள் சுவாமி புஷ்பக வாகனத்திலும், 3ம் திருநாள் சிங்க வாகனத்திலும் 4ம் நாள் கமல வாகனத்திலும், 5ம் நாள் ஆதிசேஷ வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும்,7ம் நாள் இந்திர வாகனத்திலும், 8ம் திருநாளான நேற்று முன்தினம் அன்ன வாகனத்திலும் சுவாமி திருவீதிகளில் பவனி வந்தார்.

நேற்று 9ம் திருநாளை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. தேரை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., அறங்காவலர்குழு தலைவர் சிவகுற்றாலம், உள்ளிட்டோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். மாநகர செயலாளர் மகேஷ், சி.டி.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுவாமி ரதவீதிகளில் வலம் வந்தது.  இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சுவாமி திருக்கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Tags : festival ,Radhakrishnan ,Nagaraja Temple ,
× RELATED சென்னையில் உள்ள வாக்கு எண்ணும்...