×

ஊட்டியில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதிகளில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் ஆய்வு-சரமாரி கேள்விகளால் பரபரப்பு

ஊட்டி :  ஊட்டி நகராட்சி தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லாதது குறித்து நகராட்சி ஆணையரிடம் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய (சபாய் கர்மசாரிஸ்) தலைவர் வெங்கடேசன் நேற்று ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஓல்டு ஊட்டி பகுதியில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசிப்பவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சிலர், ‘‘இப்பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகிறோம்.  இங்குள்ள பொது கழிப்பிடம் போதிய பராமரிப்பில்லை. அசுத்தமாக உள்ளது. போதுமான அளவு தண்ணீர் வசதி இல்லை. இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம்’’ என தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் தொிவித்த கழிப்பிடத்தை பார்வையிட்டு அவை சுகாதாரமின்றி மிகவும் அசுத்தமாக நிலையில் இருந்ததை கண்டு தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதி என்பதால் பாகுபாடு காட்டப்படுகிறதா? என நகராட்சி ஆணையர் சரஸ்வதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். நகராட்சி நிர்வாகம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய நிதி நெருக்கடியில் இருந்ததாகவும், அதனால் இதுபோன்ற வளர்ச்சி பணிகள், தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் போன்றவைகள் மேற்கொள்வதில் சிரமம் இருந்தது. தற்போது நகராட்சி கடைகள் வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. அந்த நிதியை கொண்டு தூய்மை பணியாளர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து ஊட்டி காந்தல் ஸ்லேட்டர் அவுஸ் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் குறைகள் கேட்டறிந்தார். அப்போது அவர்கள், தங்களை ஒப்பந்தத்திற்கு எடுத்த நிறுவனம், முறையாக விளக்குமார், கையுறை போன்றவற்றை தருவதில்லை என தெரிவித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சிக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து தமிழகம் மாளிகையில் ஆய்வுகூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகள், 35 ஊராட்சிகள், 11 பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. தாமதமாகவே வழங்கப்படுகிறது. ஒப்பந்த பணியாளர்களுக்கு வங்கிகள் மூலமாக ஊதியம் வழங்காமல் நேரடியாக வழங்கப்படுகிறது. அதுவும் நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவாகவே வழங்கப்படுகிறது. கொரோனாவில் பலியான தூய்மை பணியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி  கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அதிகாரிகள் மாதந்தோறும் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தி தூய்மை பணியாளர்களின் தெரிவிக்கும் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும். வங்கிகள் மூலமாக தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்குகிறார்களா? ஒப்பந்ததில் தெரிவித்துள்ள உபகரணங்களை வழங்குகிறார்களா? என்பது போன்வற்றையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். தவறும் ஒப்பந்ததாரர்கள் குறித்த விவரங்களை தெரிவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இந்த ஆய்வு கூட்டத்தில் கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன்,  சப்-கலெக்டர்கள் மோனிகா ரானா, தீபனா விஸ்வேஸ்வரி, கூடலூர் ஆர்டிஓ சரவண கண்ணன், கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம், நகராட்சி ஆணையர்கள் சரஸ்வதி, கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க வேண்டும்தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஊட்டியில் கூறியதாவது: ஊட்டியில் தூய்மை பணியாளர்கள் வசிக்க கூடிய இரு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பல்வேறு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர். கழிப்பிடங்கள் போன்றவற்றை பார்வையிட்ட போது அவை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இவற்றை சரி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தூய்மை பணியாளர்கள் குறைகள் கேட்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு கூட்டத்தில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்தனர். ஒப்பந்த பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட குறைந்த ஊதியத்தை ஒப்பந்த நிறுவனம் வழங்குவதாக தெரிவித்தனர். ஒப்பந்த பணியாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ போன்றவை முறையாக பிடித்தம் செய்யப்படுகிறதா? என கேட்டறியப்பட்டது. இவை முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் எத்தனை ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா? பணியாளர்கள் தெரிவித்துள்ள குறைகள் குறித்தும் இக்குழு மூலம் ஆய்வு நடத்தி, விதிமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்ததை ரத்து செய்வதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை கருப்பு பட்டியலில் ஆய்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தூய்மை பணியாளர்கள் குறைகளை சொல்வதற்கே அச்சப்படுகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணி மேற்கொள்ள தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கும் முறையை அரசு நிறுத்த வேண்டும். இந்த முறையால் ஒப்பந்த பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு தனிக்குழு அமைத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் பாதிப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், என்றார்.9. பழுதடைந்த பாலத்தால் பாதிப்புபந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா சோலவயல் பாலம் பழுதடைந்து காணப்படுவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா வாழவயல் அருகே சோலவயல் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். வாழவயல் பகுதியில் இருந்து சோலவயல் பகுதிக்கு  செல்லும் சாலையில் நீரோடையின் குறுக்கே பாலம் உள்ளது. ஏற்கனவே அந்த பாலம் பழுதடைந்து இருந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்த கனமழைக்கு மேலும் பழுதடைந்து காணப்படுகிறது.தினந்தோறும் ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் பாலத்தின் வழியாக சென்று வரும் நிலையில் வலுவிழந்த பாலம் உடைந்து அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் நிலை உள்ளது. பழுதடைந்த இப்பாலத்தை சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்த பாலத்தை நெல்லியாளம் நகராட்சி  சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சோலவயல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஊட்டியில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதிகளில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் ஆய்வு-சரமாரி கேள்விகளால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : National Cleanliness Staff Commission ,National Cleanliness Personnel Commission ,Feedi ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...