- யூனியன் பா.
- ஜே. க.
- வி.பி.ஜி.ஆர்.ஏ.எம்.ஜி.
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- உனியா பா
- விக்ஸிட்
- பாரத் ஜி ராம்-ஜி
சென்னை: ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள விக்சித் பாரத் ஜி ராம்-ஜி வேலை உறுதித் திட்டமே அல்ல, அது அழிவுத்திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “மக்களின் தேவையின் அடிப்படையில் அமைந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்குப் பதிலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள விக்சித் பாரத் ஜி ராம்-ஜி வேலை உறுதித் திட்டமே அல்ல, அது அழிவுத்திட்டம்! கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக்கட்டும் சதி!
பெயர்மாற்றமும் சரியில்லை, நோக்கத்திலும் நன்மை இல்லை. இதுவரை விடுவிக்க வேண்டிய நிதியையே தராமல் இழுத்தடித்து வந்த இவர்கள், இனி 40% நிதிச்சுமையை மாநில அரசின் தலையில் ஏற்றவே இப்புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
மொத்தப் பணியாளர்களில் 85% பெண்கள் பயன்பெற்று வந்த மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதித் திட்டம் தேசத் தந்தையின் பெயரிலேயே, பழைய முறையிலேயே தொடர வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
“பிரதமரை வரவேற்கச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், மக்கள்மேல் சிறிதேனும் அக்கறையோடு இதுகுறித்து வலியுறுத்துவாரா?” என்றும் சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பினேன்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
