- அமுகா
- துணை பொதுச்செயலாளர்
- மாணிக்கராஜா
- திமுகாவி
- சென்னை
- மணிக்கரஜவி
- டி.
- வி.
- தின மலர்
- எஸ். வி. எஸ்பி டிடிவி தினகரன்
- மணிகராஜா
- அம்முகா
சென்னை: அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து டி.டி.வி. தினகரன் நீக்கினார். அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் S.V.S.P.மாணிக்கராஜாவை நீக்கி டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மாணிக்கராஜா நீக்கியுள்ளார்.
மேலும் இது குறித்து டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் S.V.S.P.மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா தனது ஆதரவாளர்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் 3 மாவட்டச் செயலாளர்களும் திமுகவில் இணைந்தனர். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அமமுக செயலாளர் ரத்தினராஜ், மத்திய மாவட்ட செயலாளர் டெல்லஸ் திமுகவில் இணைந்தனர். தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் ராமச்சந்திர மூர்த்தியும் திமுகவில் இணைந்தார்.
மேலும் மாணிக்கராஜா அளித்த பேட்டியில்; “அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று பலமுறை டிடிவியிடம் தெரிவித்தேன். அதிமுக கூட்டணியில் இணைய வேண்டாம் என பலமுறை கூறியும் தினகரன் கேட்கவில்லை. 8 ஆண்டு கஷ்டப்பட்டு வளர்த்த அமமுகவை மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு சென்றது அமமுகவினருக்கு அதிருப்தி. அமமுகவை 8 ஆண்டுகாலம் வளர்த்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ” என கூறியுள்ளார்.
