சென்னை : ஒன்றிய அரசின் ஜி ராம் ஜி திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. 100 நாள் வேலைத்திட்டம் 2005-ன்படி கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வேலைக்கான வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
