×

விபத்தில் மருத்துவர் பலி

தேவதானப்பட்டி, ஜன. 23: தேவதானப்பட்டி அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் கணேசன் (59). இவர் அக்குபஞ்சர் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தேவதானப்பட்டி பெரியகுளம் பைபாஸ் சாலையில் டி.வாடிப்பட்டி பிரிவு அருகே நடைபயிற்சி சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

அருகிலிருந்தவர்கள் அவரே மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரே பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags : Devadhanapatti ,Ganesan ,Devadhanapatti Annanagar Colony ,D. Vaadipatti ,Periyakulam ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...