- திருஞான சம்பந்தர்
- திருவாவடுதுறை ஆதீனம்
- குத்தாலம்
- திருக்கயிலாய பரம்பரை ஆத்தினகுரு முதல்வர் குரு பூஜை விழா
- திருவாவடுதுறை
- மயிலாதுதுரை மாவட்டம்
- பெருமான்…
குத்தாலம், ஜன.23: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருவாவடுதுறை கிராமத்தில் அமைந்துள்ள திருக்கயிலாய பரம்பரை ஆதீனகுரு முதல்வர் குருபூஜை பெருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இப்பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருஞான சம்பந்த பெருமானுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு திருவாவடுதுறை கோமுதீஸ்வரர் கோயிலில் நடந்தது.
இதையொட்டி கோயிலில் உள்ள விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு மலர் அலங்காரத்திலும் சிறப்பு பல்லக்கில் திருஞான சம்பந்த பெருமான் எழுந்தருளி திருவீதியுலா வந்தடைந்து பின்னர் பொற்கிழி வாங்கும் நிகழ்வு நடந்தது.
திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் சுவாமிகள் திருமுன்னர் நூற்றுக்கும் மேற்பட்ட ஒதுவா மூர்த்திகள் திருவாசக பதிகங்கள் பாடினர். இந்நிகழ்வில் தேவார, திருவாசக பதிகம் பாடும் ஓதுவார்களுக்கு ஐந்தாயிரம் பொற்கிழியும், ருத்ராட்ச மாலையும், சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக புதிய நாணயங்கள் வழங்கப்பட்டன.
