சென்னை: ஜனவரி 25ம் தேதி மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதில்; வழக்குகளை பார்த்து பயந்து அதிமுக டெல்லிக்கு ஓடி பாஜகவின் பாதம் பணிந்து நின்று விடுகின்றது. ED, IT, சிபிஐயை வைத்து திமுகவினரை முடக்கிவிடலாம் என்ற சதித்திட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் பணிய மாட்டோம், துணிந்து நிற்போம்; இனம்-மொழி-நிலம் காத்திடும் போரைத் தொடர்ந்திடுவோம்
