×

மனைவியுடன் தகராறு கணவர் தூக்கிட்டு தற்கொலை

தாராபுரம், ஜன. 22: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நாடார் தெருவை சேர்ந்தவர் ராகவன் (38), பெயிண்டர். இவருக்கு, மலர்விழி (35) என்ற மனைவி, சஹானா (15), கவின் (12) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் ராகவனுக்கும், இவரது மனைவி மலர்விழிக்கும் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று 10 மணிக்கு நண்பருடன் டீ குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்ற ராகவன், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் தாராபுரம் போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, ராகவனின் உடலை கைப்பற்றிய போலீசார் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Tarapuram ,Raghavan ,Nadar Street, Tarapuram, Tiruppur district ,Malarvizhi ,Sahana ,Kavin ,
× RELATED உடுமலை ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளை 2 ஆக பிரிக்க முடிவு