மொடக்குறிச்சி, ஜன. 22: மொடக்குறிச்சி மற்றும் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை எம்பி., கே.இ.பிரகாஷ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இதில், மொடக்குறிச்சி திமுக பேரூர் செயலாளர் சரவணன், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக பேரூர் துணைச்செயலாளர் தன.வெங்கடேஷ், அவைத்தலைவர் பழனிசாமி, மொடக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திகேயன் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல், எழுமாத்தூரிலும் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
