ஈரோடு, ஜன. 20: திருப்பூரில் நாளை (21ம் தேதி) நடக்கும் குறளாசிரியர் மாநாட்டில் பங்கேற்க ஈரோட்டை சேர்ந்த 30 ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளுவர் உருவ சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருப்பூரில் நாளை (21ம் தேதி) குறளாசிரியர் மாநாடு நடைபெற உள்ளது.
இதில், பங்கேற்க ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு கடந்த 9ம் தேதி திருக்குறள் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில், இருந்து 15 ஆசிரியர்கள், 15 அரசு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 30 பேரும் ஈரோடு மாவட்டம் சார்பில் இன்று (20ம் தேதி) திருப்பூர் சென்று, நாளை (21ம் தேதி) நடக்கும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இத்தகவலை பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
