×

எஸ்ஐ, ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

அந்தியூர், ஜன. 22: அந்தியூர் அருகே போலீஸ் எஸ்ஐ மற்றும் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவு பகுதியில் இருவருக்கு இடையே நேற்று முன்தினம் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அந்தியூர் காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக தகவல் கிடைத்தது. சம்பவயிடத்துக்கு எஸ்ஐ செபஸ்தியான், ஏட்டு சந்திரன் ஆகியோர் சென்று கண்காணித்தனர். அப்போது 2 பேர் சத்தம் போட்டு கொண்டு பிரச்னை செய்து கொண்டு இருந்தனர்.

அவர்கள் 2 பேரிடமும் சென்று விசாரித்தனர். அப்போது, அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் வடக்குகாடு பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் (34) என்பவர் எஸ்ஐ மற்றும் ஏட்டுவை தகாத வார்த்தையால் பேசி, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். எஸ்ஐ செபஸ்தியான் கொடுத்த புகாரின் பேரில் மோகனசுந்தரத்தை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : SI ,Anthiyur ,Annamaduvu ,Erode district ,Anthiyur… ,
× RELATED மொடக்குறிச்சியில் நேரடி கொள்முதல் நிலையம்