கந்தர்வகோட்டை, ஜன.22: கந்தர்வகோட்டை பகுதியில் எள் சாகுபடிக்கு பாராமறிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் முழுவதும் விவசாய பணி நடைபெறுகிறது. இதில் குறிப்பாக கடலை தோட்டத்தில்களை வெட்டுவது, ஜிப்சம் உரம் இடுவது போன்ற பணி நடைபெறுகிறது மேலும் சில விவசாயிகள் எள் விதைத்து உள்ளனர் அது வளர்ந்துவரும் வேலையில் களை வெட்டி ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் பாய்ச்சி வருகிறார்கள்.
விவசாயிகள் கூறும் வேளாண்மைதுறையினர் அனைத்து விவசாய நிலங்களுக்கும் நேரில் சென்று மண்தன்மையை அறிந்து எந்த விவசாயம் செய்ய ஏற்றது என பரிந்துரை செய்ய வேண்டும். தரமான விதைகளை வேளாண்மைதுறை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும்.
மேலும் வேளாண் அலுவலர்கள் விவசாய நிலங்களை தொடர் கண்கணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அரசு நிர்ணயித்துள்ள மகசூல் இயற்கை சீற்றத்தலோ, விதையில் கரணமாகவோ கிடைக்கவில்லை எனில் குறைகின்ற இழப்பீட்டை காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு கிடைக்க வேளாண் உதவி அலுவலர்கள் பரிந்துரை செய்ய வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
